/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேர்தல் பணி தொடர்பாக குறைகள் கேட்பு: கரூர் மாவட்ட பா.ஜ.,வினர் உற்சாகம்
/
தேர்தல் பணி தொடர்பாக குறைகள் கேட்பு: கரூர் மாவட்ட பா.ஜ.,வினர் உற்சாகம்
தேர்தல் பணி தொடர்பாக குறைகள் கேட்பு: கரூர் மாவட்ட பா.ஜ.,வினர் உற்சாகம்
தேர்தல் பணி தொடர்பாக குறைகள் கேட்பு: கரூர் மாவட்ட பா.ஜ.,வினர் உற்சாகம்
ADDED : மே 10, 2024 07:26 AM
கரூர் : ஓட்டுப்பதிவு முடிந்து, தேர்தல் பணிகள் தொடர்பாக குறைகளை கேட்கும் வகையில், பூத் கமிட்டி கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதால், கரூர் மாவட்ட பா.ஜ.,வினர் உற்சாகத்தில் உள்ளனர்.
தமிழகத்தில், லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப்.,19ல் நடந்தது. பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை உள்பட சில தலைவர்கள் டெல்லி, ஆந்திராவில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசி வருகின்றனர். தமிழக சட்டசபை தேர்தலுக்கு, 500 நாட்களே உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள இப்போதிருந்தே திட்டமிட வேண்டும் என, அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி கரூர், பா.ஜ., சார்பில் தேர்தல் பணியாற்றிய பூத் கமிட்டினருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது: கரூர் லோக்சபா தொகுதியில், 28 ஆண்டுகளுக்கு பின், பா.ஜ., சார்பில் வேட்பாளர் செந்தில்நாதன் போட்டியிட்டுள்ளார். இரண்டு திராவிட கட்சிகளை போல, ஒவ்வொரு தொகுதியிலும், வார்டு, கிராம பஞ்சாயத்து வாரியாக சுற்றுபயணத்தை தினமும் செந்தில்நாதன் நடத்தி பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் முடிந்த பின், பூத் கமிட்டியினரை யாரும் கண்டுகொள்வதில்லை. அடுத்த தேர்தல் வரும் போதுதான், அவர்கள் ஞாபகம் வரும். இதற்கு மாறாக, பா.ஜ., மாவட்ட தலைவர் செந்தில்நாதன், லோக்சபாவில் ஆறு தொகுதியில் உள்ள, 1,670 பூத் கமிட்டியில் உள்ள, 3,000க்கும் மேற்பட்டவர்களை சந்தித்து வருகிறார்.நேற்று முன்தினம் கரூர் தொகுதி, நேற்று அரவக்குறிச்சி பூத் கமிட்டியில் உள்ளவர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்களா?. நோட்டீஸ் உள்பட தேவையானவை கிடைத்துள்ளதா? தேர்தல் பணியின் போது சங்கடம் ஏற்பட்டதா? ஆளும் கட்சியினர் நெருக்கடி கொடுத்தார்களா? ஆகிய கேள்விகள் கேட்கப்பட்டது. அது குறித்து ஒவ்வொருக்கும் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு சைவ, அசைவ விருந்து பரிமாறப்பட்டது. தமிழகத்தில் எந்த கட்சியும் தேர்தல் முடிந்த பின் பூத் வாரியாக கூட்டம் நடத்தியதாக தெரியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, பா.ஜ. மாவட்ட தலைவர் செந்தில்நாதன் கூறியதாவது: பூத் கமிட்டிகளில் பணியாற்றிவர்களை பாராட்டி, விருந்து அளிப்பது மட்டுமின்றி, அவர்களிடம் இருந்து நிறை, குறைகளை தெரிந்து கொண்டால், வரும் தேர்தல்களில் கடுமையாக பணியாற்ற முடியும். முதற்கட்டமாக கரூர், அரவக்குறிச்சி தொகுதியில் பூத் கமிட்டி கூட்டம் நடந்துள்ளது இன்று கிருஷ்ணராயபுரம், அடுத்த வாரம் வேடசந்துார், மணப்பாறை, விராலிமலை பூத் கமிட்டி கூட்டம் நடக்கவுள்ளது. வாக்காளர்களை சந்தித்து, ஓட்டு போட அழைத்து வரும் பணியில் பூத் கமிட்டி பங்கு முக்கியமானது. இதை வலுப்படுத்தினால்தான், திராவிட கட்சிகளுக்கு மாற்று சக்தியாக, பா.ஜ., நிற்க முடியும்.இவ்வாறு கூறினார்.