ADDED : மார் 26, 2026 05:28 AM
அ நிறம் | அளவு
கரூர் :நொய்யல் அருகேயுள்ள சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்,நிலக்கடலை ஏலம் நடந்தது. ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 410 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 65.29 ரூபாய், அதிகபட்சமாக, 92.30 ரூபாய், சராசரியாக, 90.39 ரூபாய்க்கு ஏலம் போனது.
மொத்தம் 12,679 கிலோ எடையுள்ள நிலக்கடலை, 10 லட்சத்து, 81 ஆயிரத்து, 297 ரூபாய்க்கு விற்பனையானது.
