ADDED : செப் 23, 2024 04:34 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், மானாவாரி நிலங்களில், நிலக்கடலை அறுவடை தொடங்கியுள்ளது.
கரூர் மாவட்டத்தில், கடவூர், கிருஷ்ணராயபுரம், தான்தோன்றி-மலை மற்றும் கரூர் வட்டாரங்களில், மானாவாரி நிலங்களில் ஆண்டுதோறும், ஆடி மாதத்தில் பருவ மழையை கணக்கில் கொண்டு, நிலக்கடலை சாகுபடி செய்வது வழக்கம். நடப்-பாண்டு ஏப்ரல் மாதம் முதல் மழை பெய்ய துவங்கியதால், மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி விறுவிறுப்பாக நடந்தது. தற்போது, அறுவடை துவங்கி உள்ளது. கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நிலக்கடலை விற்-பனை கன ஜோராக நடந்து வருகிறது. ஒரு படி, 30 ரூபாய் முதல், 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்-தாண்டு செப்., மாதம் நிலக்கடலை வரத்து குறைவால், ஒருபடி, 50 ரூபாய் வரை விற்றது. தற்போது, நிலக்கடலை விலை குறைந்-துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.