/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மழைநீர் சேமிக்க முடியாமல் முட்செடிகள் வளர்ச்சி
/
மழைநீர் சேமிக்க முடியாமல் முட்செடிகள் வளர்ச்சி
ADDED : மே 10, 2024 07:25 AM
கிருஷ்ணராயபுரம் : கோவக்குளம், மழை நீர் சேமிப்பு குளத்தில் அதிகமான முள் செடிகள் வளர்ந்து வருவதால், மழை நீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, கோவக்குளம் கிராமத்தில் மழை நீர் சேமிக்கும் குளம் உள்ளது.
பல்வேறு கிராம பகுதியில் இருந்து, மழை காலங்களில் மழை நீர் வந்து குளத்தில் தேங்கி சேமிக்கப்படுகிறது. கோவக்குளம் சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள, விவசாய கிணறுகளுக்கு நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் குளத்தில் அதிகமான முள் செடிகள் வளர்ந்து வருவதால், மழை காலங்களில் பெய்யும் மழை நீர் முழுமையாக சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முள் செடிகள் இருப்பதால் நீர் மட்டம் குறைகிறது. மேலும் வறட்சி ஏற்படும் நிலை உள்ளது. எனவே, குளத்தில் வளர்ந்து வரும் முள் செடிகளை அகற்ற டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.