/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின விழா
/
ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின விழா
ADDED : செப் 07, 2025 01:18 AM
கரூர் :கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், தமிழ்நாடு காவலர் தின விழா நேற்று நடந்தது.
அதில், மினி மாரத்தான் போட்டி, ஆண் மற்றும் பெண் போலீசார் தண்டால் எடுக்கும் போட்டி, நடன நிகழ்ச்சி, காவல் போற்றுதும் என்ற தலைப்பில், பாண்டி மணிகண்டன் என்பவரின் ஊக்குவிக்கும் பேச்சு, மிமிக்கிரி நிகழ்ச்சி உள்ளிட்ட, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
மேலும், பணியின் போது உயிரிழந்த, போலீசாரின் நினைவாக அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், எஸ்.பி., ஜோஸ் தங்கையா, ஏ.டி.எஸ்.பி.,க்கள் பிரேம் ஆனந்த், பிரபாகரன், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.