/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு கலை கல்லுாரியில் போட்டி தேர்வுக்கான வழிகாட்டல் பயிற்சி
/
அரசு கலை கல்லுாரியில் போட்டி தேர்வுக்கான வழிகாட்டல் பயிற்சி
அரசு கலை கல்லுாரியில் போட்டி தேர்வுக்கான வழிகாட்டல் பயிற்சி
அரசு கலை கல்லுாரியில் போட்டி தேர்வுக்கான வழிகாட்டல் பயிற்சி
ADDED : ஆக 01, 2025 01:46 AM
அரவக்குறிச்சி,அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவ, மாணவியர் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், அவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு நடைபெற்றது.
கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி தலைமை வகித்தார். கரூர் மயிலிறகு அகாடமி நிறுவனத்தின் சார்பில் பயிற்சி நடத்தப்பட்டது.
மயிலிறகு அகாடமி தலைவர் சந்திரமோகன் மாணவ மாணவியரிடம் பேசுகையில், ''போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெற, பாடங்களை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். மாதிரி தேர்வுகளை எழுத வேண்டும்.
மேலும், தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் அனுபவங்களை கேட்க வேண்டும். அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் பயிற்சி அளிக்கின்றன. ஆனால், மாணவர்கள் சுயமுயற்சியுடன் தேர்வுகளுக்கு தயாராவதும் அவசியம்,'' என்றார்.
மாணவ மாணவியரிடம் போட்டி தேர்வு குறித்த கருத்துகள் பெறப்பட்டது. ஏற்பாடுகளை கல்லுாரி பேராசிரியர் செந்தில்குமார் செய்திருந்தார்.