/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பசுபதீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்
/
பசுபதீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்
பசுபதீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்
பசுபதீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்
ADDED : மே 12, 2025 03:10 AM
கரூர்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், குருப்பெயர்ச்சி விழாவை-யொட்டி, குருபகவான் மஞ்சள் நிற சிறப்பு பூக்கள் அலங்கா-ரத்தில், பக்தர்
களுக்கு அருள் பாலித்தார்.
நவக்கிரகங்களில் முக்கிய கிரகமான குரு பகவான், ஆண்டுக்கு ஒரு முறை ராசி விட்டு மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். நேற்று மதியம், 1:19 மணிக்கு குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து, மிதுனம் ராசிக்கு இடப்பெயர்ச்-சியானார். அதையொட்டி, கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், இரண்டு நாட்களாக குருப்பெயர்ச்சியையொட்டி லட்சார்ச்சனை நடந்தது. நேற்று நவக்கிரக மூர்த்திகளுக்கும், குரு பகவானுக்கும் மூலமந்திர யாகம், அஸ்திரே ேஹாமம், மகா அபிேஷகம் நடந்தது. பின், தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, குரு பகவான் பல்வேறு விதமான, மஞ்சள் நிற சிறப்பு பூக்கள் அலங்-காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, குரு பகவானை வழிபட்டனர்.
* லாலாப்பேட்டையில் செம்போர்ஜோதீஸ்வரர், தர்மசம்வர்த்-தனி சமேத சிவன் கோவில் உள்ளது. கோவிலில் நேற்று மதியம் 1:20 மணிக்கு குருப்பெயர்ச்சியை முன்னிட்டு கோவில் வளா-கத்தில் சிறப்பு யாக வேள்வி நடந்தது.
தொடர்ந்து கோவிலில் தனி சன்னதியில் உள்ள தெற்கு பார்த்த தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.
சிவன் மற்றும் தர்மசம்வர்த்தனி அம்மனுக்கு பூஜை செய்து தீபா-ராதனை காட்டப்பட்டது. மேலும் குருப்பெயர்ச்சியில் குருவா-னது ரிஷப ராசியில் இருந்து, மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். பரிகார ராசிகளுக்கு சிறப்பு அர்ச்சனை, நன்மை அடையும் ராசிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நுாற்றுக்க-ணக்கானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்-கப்பட்டது.