/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஈரோடு, கரூர் அருகே கை துப்பாக்கி பறிமுதல்: 6 பேரை கைது செய்து விசாரணை
/
ஈரோடு, கரூர் அருகே கை துப்பாக்கி பறிமுதல்: 6 பேரை கைது செய்து விசாரணை
ஈரோடு, கரூர் அருகே கை துப்பாக்கி பறிமுதல்: 6 பேரை கைது செய்து விசாரணை
ஈரோடு, கரூர் அருகே கை துப்பாக்கி பறிமுதல்: 6 பேரை கைது செய்து விசாரணை
ADDED : அக் 10, 2024 03:27 AM
சென்னிமலை: கரூர் மாவட்ட சிறப்பு படை போலீசார், நேற்று ஈரோடு மாவட்டம், சென்னிமலை, பாரதிநகரை சேர்ந்த யுவராஜ், 34, என்பவரை கைது செய்து, ஒரு கை துப்பாக்கியை (7.65 எம்.எம்.) பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் கரூரை சேர்ந்த முகேஷ், அவரது நண்பர்கள் ரஞ்சித் சக்கரவர்த்தி, கோபால் ஆகி-யோருடன் சேர்ந்து கள்ள துப்பாக்கி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்படி, மேற்கண்டவர்களை பிடித்து கரூர் மாவட்ட சிறப்பு போலீசார் விசாரணை செய்தனர். இதில், முகேஷ் உடன் இருந்த கோபாலிடம் இருந்து ஒரு நாட்டு கைதுப்-பாக்கி (7.65 எம்.எம்.) கைப்பற்றப்பட்டது. முகேஷிடம் விசாரணை செய்தபோது, ஓராண்டுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம், முத்துாரை சேர்ந்த ஓட்டக்காது செந்தில் என்பவர் மூலம் சென்னிமலையை சேர்ந்த யுவராஜ் என்பவருக்கும், ஈரோடு 46 புதுார் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் துப்பாக்கிகளை விற்பனை செய்த தகவல் தெரிந்தது.இதையடுத்து, கரூர் மாவட்ட சிறப்பு படை இன்ஸ்பெக்டர் முத்-துக்குமார் தலைமையிலான போலீசார், திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் ஓட்டக்காது செந்திலை கைது செய்து, அவர் மூல-மாக நேற்று சென்னிமலை வந்து யுவராஜை கைது செய்தனர். பின் அவரிடமிருந்து ஒரு கை (7.65 எம்.எம்) துப்பாக்கி கைப்பற்-றப்பட்டது. அதன் பின் மற்றொரு துப்பாக்கியை வாங்கிய, 46 புதுார் மூர்த்தி என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில், மூர்த்தி தான் வாங்கிய துப்பாக்கியை நாமக்கல் மாவட்டம், குமா-ரபாளையத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்பவருக்கு விற்று விட்ட-தாகவும், தற்போது விஸ்வநாதன் இறந்துவிட்டார் என தகவல் கூறியுள்ளார்.விஸ்வநாதனுக்கு கொடுக்கப்பட்ட துப்பாக்கியை கண்டுபிடிக்க முடியவில்லை. கரூர் மாவட்ட போலீசார் கரூரில் கைது செய்யப்பட்ட மூவர், தாராபுரத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர், ஈரோட்டில் கைது செய்யப்பட்ட இருவர் என, மொத்தம் ஆறு பேரை கரூர் தாந்தோன்றிமலை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

