/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கைத்தறி ஏற்றுமதி துணி உற்பத்தியாளர் சங்க கூட்டம்
/
கைத்தறி ஏற்றுமதி துணி உற்பத்தியாளர் சங்க கூட்டம்
ADDED : ஜூலை 22, 2025 01:14 AM
கரூர், கரூர் கைத்தறி ஏற்றுமதி துணி உற்பத்தியாளர்கள் சங்க, 33 வது மகாசபை கூட்டம், தலைவர் அன்பொளி காளியப்பன் தலைமையில் நடந்தது.
அதில், ஜவுளி ஏற்றுமதி வளர்ச்சி பெற, அரசே பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தர வேண்டும். கரூரில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைத்த முதல்வர் ஸ்டாலின், கரூர் எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜிக்கு நன்றி தெரிவிப்பது, கரூர்-சென்னை இடையே பகலில் இன்டர்சிட்டி ரயில் இயக்க வேண்டும், மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலை, சென்னை எழும்பூர் வரை நீட்டிக்க வேண்டும், தொழில் வளர்ச்சிக்காக பிராங்பட் நகரில் உள்ள நடக்கவுள்ள கண்காட்சிக்கு, பார்வையாளர்களை அழைத்து செல்வது உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், செயலாளர் பால்ராஜ், இணை செயலாளர் அர்ஜூன், பொருளாளர் சுந்தர்ராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.