ADDED : நவ 15, 2024 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாரல் மழையால் மகிழ்ச்சி
அரவக்குறிச்சி, நவ. 15-
அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று சாரல் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில், கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் காலை 9:00 முதல் சாரல் மழை அவ்வப்போது பெய்து வந்தது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள், சாலையில் நனைந்தபடி சென்றனர். நேற்று அரவக்குறிச்சியில் வாரச்சந்தை என்பதால், விவசாயிகள், வணிகர்கள் போதிய விற்பனை நடைபெறாததால் ஏமாற்றம் அடைந்தனர். குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால்,
அரவக்குறிச்சி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.