நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்; கிருஷ்ணராயபுரம் பகுதியில், துவரை அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழையஜெயங்கொண்டம், கோவக்குளம், தாராபு-ரத்தனுார், சேங்கல், லட்சுமணம்பட்டி, பஞ்சப்-பட்டி, வயலுார், சரவணபுரம், பாப்பகாப்பட்டி, மலையாண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசா-யிகள் மானாவாரி நிலங்களில் துவரை சாகுபடி செய்திருந்தனர். துவரை சாகுபடிக்கு, மழைநீர் ஆதாரமாக இருந்தது. தற்போது செடிகளில் இருந்து, துவரை அறுவடை பணியில் தொழிலா-ளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். துவரை தனியாக பிரித்து, துாய்மை செய்யும் பணியும் நடந்து வரு-கிறது.

