/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வயலுார் பகுதிகளில் சிவப்பு சோளம் அறுவடை தீவிரம்
/
வயலுார் பகுதிகளில் சிவப்பு சோளம் அறுவடை தீவிரம்
ADDED : ஜூலை 05, 2024 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: வயலுார் சுற்று பகுதிகளில், சிவப்பு சோளம் பயிர்கள் அறுவடை பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சாயத்துக்குட்பட்ட சரவ-ணபுரம், வயலுார், நடுப்பட்டி ஆகிய பகுதியில் விவசாயிகள் பர-வலாக கிணற்று நீர் பாசன முறையில், சிவப்பு சோளம் பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது பயிர்கள் செழிப்பாக வளர்ந்து கதிர்கள் முதிர்ந்துள்ளது. இதனால் அறுவடை பணி-களில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கால்நடைக-ளுக்கு தீவனமாகவும் சிவப்பு சோளம் பயன்படுகிறது.