தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மோசமான நிலையில் சுகாதார வளாகம்

மோசமான நிலையில் சுகாதார வளாகம்

மோசமான நிலையில் சுகாதார வளாகம்


ADDED : டிச 10, 2024 01:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 10, 2024 01:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம், டிச. 10-

லாலாப்பேட்டை, சந்தைப்பேட்டை வாரச்சந்தை உட்புறம் உள்ள சுகாதார வளாகம் மோசமாக காணப்படுகிறது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்சாயத்து லாலாப்பேட்டை சந்தைப்பேட்டை வாரச்சந்தை புதன்கிழமை தோறும் கூடுகிறது. சந்தை வளாக உள்புறத்தில், பொது சுகாதார வளாகம் அமைந்துள்ளது. தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. வளாகத்தை சுற்றி அதிகமான செடிகள் வளர்ந்து, புதர்போல் இருப்பதால் மக்கள், வியாபாரிகள் பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.

எனவே, சுகாதார வளாகத்தை புதுப்பிக்க தேவையான நடவடிக்கையை பஞ்சாயத்து நிர்வாகம் எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us