ADDED : பிப் 14, 2025 07:16 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்: பஞ்சப்பட்டி நெடுஞ்சாலை பகுதியில் உள்ள, சுகாதார வளாக கட்டடம் மிகவும் மோசமாக காணப்படுகிறது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, பஞ்சப்பட்டி நெடுஞ்சாலை பகுதியில் சுகாதார வளாகம் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது வளாக கட்டடத்தின் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில், முள் செடிகள் வளர்ந்து வருகிறது. இதனால் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சுகாதார வளாகத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
