ADDED : ஏப் 24, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்:
கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி பஞ்சாயத்து அரசு மேல்நிலைப்பள்ளி சாலை அருகில், சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதை மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது சுகாதார வளாகம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.
கதவுகள் உடைந்து, பராமரிப்பு இன்றி செடிகள் வளர்ந்து புதர்கள் மண்டியுள்ளது. மேலும் தண்ணீர் வசதி இல்லை. இதனால் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாமல் மக்கள் உள்ளனர். சுகாதார வளாகத்தை சரி செய்ய   நடவடிக்கை எடுக்க வேண்டும்.

