/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார செவிலியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 11, 2025 01:14 AM
கரூர், கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில துணை செயலாளர் நாகலட்சுமி தலைமை வகித்தார். தடுப்பூசி வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு தனியார் மயமாக்கி வருகிறது. இதனால், கிராமப்புற சுகாதார செவிலியர்களின் பணி, அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. இது கிராமப்புற செவிலியர்களின் பணி பறிப்பு மட்டுமல்ல, இது தடுப்பூசிகளை இலவசமாக உரிய நேரத்தில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பெறும் உரிமைகளுக்கே எதிரானதாகும்.
தமிழகத்தில், 8,488 துணை சுகாதார நிலையங்களில், 4,000க்கும் மேற்பட்ட கிராமப்புற சுகாதார செவிலியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.