/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் தொடக்கம்
/
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் தொடக்கம்
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் தொடக்கம்
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் தொடக்கம்
ADDED : ஆக 03, 2025 12:56 AM
கரூர், கரூர், தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம் நடந்தது.
கலெக்டர் தங்கவேல் முகாமை பார்வையிட்டார். இங்கு பொது மருத்துவம், எலும்பு முறிவு, பேறு கால மருத்துவம், குழந்தைகள் நலம், இதய நல மருத்துவம், நரம்பியல், நுரையீரல் சிறப்பு மருத்துவம், நீரழிவு நோய்க்கான மருத்துவம், தோல் சிறப்பு மருத்துவம், பல் மருத்துவம், கண் சிறப்பு மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், சித்த மருத்துவம், உணவியல் மருத்துவம் உள்பட, 17 சிறப்பு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும், முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ.,சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், மண்டலக்குழு தலைவர்கள் கனகராஜ், அன்பரசு, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செழியன், மருத்துவ கல்லுாரி முதல்வர் லோகநாயகி, மாநகராட்சி கமிஷனர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.