ADDED : அக் 22, 2025 01:15 AM
கரூர், தென்மேற்கு வங்கக்
கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதால், தெற்கு, மத்திய மேற்கு வங்கக்
கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது. பின், புயல் சின்னம் தமிழகம் நோக்கி நகரக்கூடும் என்பதால், பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதில், கரூர், அரவக்குறிச்சி, க.பரமத்தி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. கரூர் மாநகராட்சி பகுதியான செல்லாண்டிபாளையம், திருமாநிலையூர், வெங்கமேடு, தான்-தோன்றிமலை, பசுபதிபாளையம், தொழிற்பேட்டை, சுங்ககேட், காந்திகிராமம் உள்பட இடங்களில் தொடர் மழையால் சாலையில் தண்ணீர் ஓடியது. அதில், வடிகால் கால்வாய் வழிந்து சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஓடியது.