ADDED : மே 17, 2026 05:02 AM
கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை பல்வேறு இடங்களில், சாரல் மழை பெய்தது.
தெற்கு மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டியுள்ள மத்திய மேற்கு கடல் பகுதியில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் கடந்த, 15ல் அறிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்று காலை முதல் கரூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டமாக இருந்தது. பிறகு, மாலையில் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான திருகாம்புலியூர், சின்ன ஆண்டாங்கோவில், வெங்கமேடு, பசுபதிபாளையம், காந்தி கிராமம், தான்தோன்றிமலை உள்ளிட்ட பல இடங்களில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது.
* கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை, வல்லம், மகாதானபுரம், புனவாசிப்பட்டி, வேங்காம்பட்டி, வரகூர், வயலுார், சரவணபுரம், பாப்பகாப்பட்டி, சிவாயம் ஆகிய கிராமங்களில் நேற்று மதியம் முதல் காற்றுடன் கூடிய மழை பெய்தது. காற்று வீசியதால், கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும் சோளப் பயிர்கள் சாய்ந்தன. மழை பெய்ததால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. மழையால், மரவள்ளிக்கிழஙகு செடிகளுக்கு நீர் கிடைத்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
