ADDED : ஏப் 07, 2026 02:30 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதியில், சாரல் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, பாப்பகாப்பட்டி, சிவாயம், வயலுார், கருப்பத்துார், கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, பழையஜெயங்கொண்டம், மணவாசி, மாயனுார் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மிதமான சாரல் மழை பெய்தது. மழையால் கடந்த ஒரு வாரமாக வாட்டி எடுத்த வெயிலில் இருந்து மக்கள் நிம்மதி அடைந்தனர்.
வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. மேலும் பல இடங்களில் காற்றுடன் சாரல் மழை பெய்தது. கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு, பசும்புல் தீவன வளர்ச்சிக்கு பயன் கிடைத்துள்ளது.
