ADDED : அக் 14, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட சேங்கல், முனையனுார்,
பழையஜெயங்கொண்டம், மாயனுார், கரட்டுப்பட்டி ஆகிய இடங்களில், நேற்று முன்தினம் இரவு கன-மழை பெய்தது. இந்த மழை காரணமாக, சேங்கல், மாயனுார், கரட்டுப்பட்டி அருகே உயரழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பம் சாய்ந்தது. இதனால் மின் ஒயர்கள் சாலையோர மரங்களில் உரசி மின்சாரம் பாய்ந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றனர்.