/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கடும் பனிப்பொழிவு; வெற்றிலை வரத்து சரிவு
/
கடும் பனிப்பொழிவு; வெற்றிலை வரத்து சரிவு
ADDED : ஜன 20, 2026 04:55 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமா-ரன்பட்டி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி ஆகிய பகுதி-களில் கொடிக்கால் வெற்றிலை சாகுபடி செய்-யப்பட்டுள்ளது.
வாய்க்கால் நீர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது கொடிகளில் பனிப்-பொழிவு காரணமாக, வெற்றிலைகள் கருகி மஞ்சள் நிறத்தில் உள்ளது. இதனால் பசுமையான வெற்றிலைகளை பறித்து, விவசாயிகள் கவுளிக-ளாக கட்டி லாலாப்பேட்டை வெற்றிலை கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்கின்றனர்.ஒரு கவுளி வெற்றிலை கட்டு, 40 ரூபாய்க்கு விற்-கப்பட்டது. 100 கவுளி கொண்ட மூட்டை, 4,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கரூர், திருச்சி, தஞ்-சாவூர், நாகப்பட்டினம், வேலுார் ஆகிய பகுதிக-ளுக்கு, வெற்றிலைகள் கொண்டு செல்லப்பட்டு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.

