/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சின்னதாராபுரம் கடைவீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
/
சின்னதாராபுரம் கடைவீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
சின்னதாராபுரம் கடைவீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
சின்னதாராபுரம் கடைவீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
ADDED : பிப் 17, 2025 03:17 AM
கரூர்: க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், சின்னதாராபுரம் பஸ் ஸ்டாண்ட் செல்லும் கரூர், தாராபுரம் சாலையில் வங்கி, போலீஸ் ஸ்டேஷன் உள்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் செயல்-பட்டு வருகின்றன.
இங்கு, தினமும் ஏராளமான வாடிக்கையா-ளர்கள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் வாடிக்கையாளர்கள், தங்களது வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையின் நடுவே நிறுத்திவிட்டு செல்கின்-றனர்.இதனால், இவ்வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் போக்குவரத்து நெருக்கடியால் ஊர்ந்து செல்லவேண்டி உள்ளது. முக்கிய விரத நாட்களில், பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே, மாலை நேரத்தில் போதுமான போக்குவரத்து போலீசாரை அமர்த்தி கண்-காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.