/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் ஐந்து ரோட்டில் கனரக வாகனங்களால் 'டிராபிக் ஜாம்'
/
கரூர் ஐந்து ரோட்டில் கனரக வாகனங்களால் 'டிராபிக் ஜாம்'
கரூர் ஐந்து ரோட்டில் கனரக வாகனங்களால் 'டிராபிக் ஜாம்'
கரூர் ஐந்து ரோட்டில் கனரக வாகனங்களால் 'டிராபிக் ஜாம்'
ADDED : ஏப் 14, 2025 07:07 AM
கரூர்: கரூர், ஐந்து ரோடு அருகே அதிகளவு செல்லும் கனரக வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கரூர் நகர பகுதியில் இருந்து வாங்கல், புலியூர், பசுபதிபாளையம், மோகனுார், நெரூர், சோமூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் சர்ச் கார்னர், புதுத்தெரு வழியாக ஐந்து ரோடு பகுதியை கடந்து, பல்வேறு பகுதிகளை நோக்கி செல்கின்றன. இங்கு, கரூர் நகரம், வாங்கல், பசுபதிபாளையம் என, மூன்று வழி போக்குவரத்து நடக்கிறது. இப்பகுதி வழியாக கனரக வாகனங்கள் அதிகளவு வந்து செல்வதால், மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
காலை, மாலையில், லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. எனவே, கரூர் ஐந்து ரோடு வழியாக அனைத்து வாகனங்களும் எளிதாக செல்லும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.