/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ெஹல்மெட் குறித்த விழிப்புணர்வு பேரணி
/
ெஹல்மெட் குறித்த விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 22, 2025 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட, காந்தி மகான் இரு சக்கர மோட்டார் வாகனங்கள் பழுது நீக்குவோர் நலச்சங்கம் மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில், ெஹல்மெட் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று கரூரில் நடந்தது. கரூர், மனோகரா கார்னரில் இருந்து பேரணியை, போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றது.
அதில், ெஹல்மெட் அணிவதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள், விழிப்புணர்வு கையேடுகளை, அவ்வழியே சென்ற பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில், 50க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனம் பழுது நீக்குவோர், ெஹல்மெட் அணிந்தபடி சென்றனர்.