/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் பணி தொடக்கம்
/
உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் பணி தொடக்கம்
உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் பணி தொடக்கம்
உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் பணி தொடக்கம்
ADDED : பிப் 16, 2025 03:19 AM
கரூர்: கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிக்கு தடையில்லை என்ற உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அங்கு கட்டுமான பணி தொடங்கப்பட்டு உள்ளது.
கரூர் மாநகராட்சி திருமாநிலையூரில், 40 கோடி ரூபாய் மதிப்-பீட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட திட்டமிடப்பட்டது. கடந்த, 2022 செப்., 3 ல் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிக்கு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இங்கு, நவீன வசதிகளுடன், 85 பஸ்கள் நிறுத்தக்கூ-டிய அளவிற்கு புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட உள்ளது. இதன் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில் நீர் வழிப்பாதையில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்படுகிறது என, சென்னையில் உள்ள தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பா-யத்தில் வழக்கு தொடரப்பட்டது. அங்கு, கட்டுமான பணிகளை நிறுத்தவும், கரூர் மாநகராட்சிக்கு, 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.கரூர் மாநகராட்சி சார்பில் உயர் நீதிமன்ற மதுரைகிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இங்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்க மாநில அரசு, மாவட்ட நிர்வாகம், நீர்வளத்துறை, கரூர் மாநகராட்-சியால் சட்டப்பூர்வமாக அனைத்து நடைமுறைகளும் முழுமை-யாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இங்கு கட்டுமான பணியை தொடர தடையில்லை என, நேற்று முன்தினம் உயர்நீதி-மன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. பின், கரூர் திருமாநிலை-யூரில், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி, நேற்று தொடங்கி-யது. இதில், இரண்டு ஆண்டுகள் மேலாக பணி நிறுத்தி வைக்கப்-பட்டு இருந்ததால், ஏராளமான முள் செடிகள் வளர்ந்து உள்ளன. இதை நான்கிற்கும் மேற்பட்ட ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, குவிந்-துள்ள மணலை அகற்றிய பின், கட்டுமான பணி மீண்டும் துரிதப்-படுத்த திட்டமிட்டுள்ளனர்.

