/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அதிக வட்டிக்கு கடன் கொடுத்து வசூல்; செய்வது குற்றம்: எஸ்.பி., எச்சரிக்கை

ADDED : மே 08, 2024 05:27 AM
கரூர் : பொதுமக்களுக்கு அதிக வட்டிக்கு கடன் கொடுத்து, வசூல் செய்வது சட்டப்படி குற்றமாகும் என, கரூர் எஸ்.பி., பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் முறையாக அனுமதி பெறாமல், பதிவு செய்யாமல், பைனான்ஸ் தொழில் விதிமுறைகளை பின்பற்றாமல், பொதுமக்களுக்கு அதிக வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்வது, அடித்து துன்புறுத்துவதாக தகவல் வருகிறது.
இது சட்டப்படி குற்றமாகும். கந்து வட்டிக்கு பணம் கொடுத்து, அதிகப்படியான வட்டியை வசூல் செய்பவர்களை, கைது செய்து சிறைக்கு அனுப்பப்படுவர். கந்து வட்டியில் ஈடுபடுவோர் மீது பொதுமக்கள், காவல் துறை உதவி எண், 100 மற்றும் 04324-296299 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.