/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆர்ப்பாட்டம் நடத்திய ஹிந்து அமைப்பினர் கைது
/
ஆர்ப்பாட்டம் நடத்திய ஹிந்து அமைப்பினர் கைது
ADDED : டிச 05, 2024 07:45 AM
கரூர்: வங்கதேச நாட்டில், ஹிந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்திய, பா.ஜ., உள்ளிட்ட, ஹிந்து அமைப்பு நிர்-வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
வங்கதேச நாட்டில், சமீப காலமாக ஹிந்து சமூகத்தினர் மீது தாக்-குதல் கள் நடந்து வருகிறது. ஹிந்து மத கோவில்கள் இடிக்கப்-பட்டு வருகிறது. அதை கண்டித்து, தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த, பல்வேறு ஹிந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, கரூரில் தலைமை தபால் நிலையம் முன்,
ஹிந்து அமைப்புகள் சார்பில், ஆர்ப்பாட்டம் நடத்த கரூர் டவுன் போலீசார் தடை விதித்திருந்தனர். அதையும் மீறி
மாநில பா.ஜ., ஓ.பி.சி.,அணி மாநில துணைத்தலைவர் சிவசாமி, மாநில ஹிந்து முன்னணி செயலாளர்
செந்தில்குமார், வங்கதேச மீட்பு குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார், விஸ்வ ஹிந்து பரிசத் நகர தலைவர் ஓம்
சக்தி சேகர் உள்ளிட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு ஹிந்து அமைப்பினர் தலைமை தபால் நிலையம் முன் நேற்று காலை குவிந்தனர். பிறகு, வங்க-தேச நாட்டில் ஹிந்து அமைப்பினர்
தாக்கப்படுவதை கண்டித்தும், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதித்த தி.மு.க., அரசை கண்டித்தும் கோஷம்
எழுப்பினர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, ஹிந்து அமைப்பினரை கரூர் டவுன் போலீசார் கைது
செய்தனர். இதனால், தலைமை தபால் நிலையம் முன், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.