தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து அமைப்பினர் கைது

ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து அமைப்பினர் கைது

ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து அமைப்பினர் கைது


ADDED : டிச 05, 2024 07:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 05, 2024 07:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: வங்கதேச நாட்டில், இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்திய, பா.ஜ., உள்ளிட்ட, இந்து அமைப்பு நிர்-வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

வங்கதேச நாட்டில், சமீப காலமாக இந்து சமூகத்தினர் மீது தாக்கு-தல்கள் நடந்து வருகிறது. இந்து மத கோவில்கள் இடிக்கப்பட்டு வருகிறது. அதை கண்டித்து, தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்-பாட்டம் நடத்த, பல்வேறு இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்-திருந்தது. அதன்படி, கரூரில் தலைமை தபால் நிலையம் முன், இந்து அமைப்புகள் சார்பில், ஆர்ப்பாட்டம் நடத்த கரூர் டவுன் போலீசார் தடை விதித்திருந்தனர். அதையும் மீறி மாநில

பா.ஜ., ஓ.பி.சி.,அணி மாநில துணைத்தலைவர் சிவசாமி, மாநில இந்து முன்னணி செயலாளர் செந்தில் குமார்,

வங்கதேச மீட்பு குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார், விஸ்வ இந்து பரிசத் நகர தலைவர் ஓம் சக்தி சேகர்

உள்ளிட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட பல்-வேறு இந்து அமைப்பினர் தலைமை தபால் நிலையம் முன் நேற்று காலை குவிந்தனர்.பிறகு, வங்க-தேச நாட்டில் இந்து அமைப்பினர் தாக்கப்படுவதை

கண்டித்தும், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதித்த தி.மு.க., அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதையடுத்து,

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, இந்து அமைப்பினரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர். இதனால், தலைமை

தபால் நிலையம் முன், சிறிது நேரம் பரப-ரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us