ADDED : ஆக 10, 2026 05:58 AM
அ நிறம் | அளவு
கரூர்:வேலாயுதம்பாளையம் அருகே, தென்னந்தோப்பில் கூடு கட்டியிருந்த மலைத்தேனீக்களை தீயணைப்பு வீரர்கள், நேற்று அகற்றினர்.
கரூர்
மாவட்டம், வேலாயுதம்பாளையம் கவுண்டன்புதுார் செட்டிதோட்டம்
பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 50; விவசாயி. இவரது தோட்டத்தில் உள்ள,
தென்னை மரங்களில் ஆயிரக்கணக்கான மலைத்தேனீக்கள் கூடு
கட்டியிருந்தன. இதனால், விவசாய தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாமல்
தவித்தனர். இதுகுறித்து, முருகேசன், புகழூர் தீயணைப்பு
நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, நேற்று புகழூர்
தீயணைப்பு வீரர்கள் சென்று, தென்னை மரங்களில் கூடு கட்டியிருந்த,
மலைத்தேனீக்களை தண்ணீரை பீய்ச்சி அடித்து அகற்றினர்.
