/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலையில் குதிரை, காளைகள் பந்தய போட்டி
/
குளித்தலையில் குதிரை, காளைகள் பந்தய போட்டி
ADDED : ஏப் 07, 2025 04:23 AM
குளித்தலை: குளித்தலை நகராட்சி, மணத்தட்டை பகவதி பாய்ஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய, 13ம் ஆண்டு எல்லை பந்-தயம் போட்டியில், எல்லை கோட்டிலிருந்து காளைகள், குதி-ரைகள் சீறிப்பாய்ந்தன. வெற்றி பெற்ற காளை, குதிரை உரிமை-யாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இதில் பூஞ்சிட்டு மாடு, சிறிய இரட்டை மாடு, பெரிய இரட்டை மாடு என போட்டிகள் நடைபெற்றன. எம்.எல்.ஏ., மாணிக்கம் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். எல்லை கோட்டிலிருந்து காளைகள் சீறி பாய்ந்தன. பூஞ்சிட்டு மாட்டிற்கு மூன்று மைல் தொலைவும், சிறிய இரட்டை மாட்-டிற்கு ஆறு மைல் தொலைவும், பெரிய இரட்டை மாட்டிற்கு எட்டு மேல் தொலைவும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதற்காக, காளைகள் ஒன்-றுடன் ஒன்று போட்டியிட்டு சாலையில் சீறிப்பாய்வதை பொது-மக்கள் பலரும் கண்டு ரசித்தனர். குறித்த இலக்கை குறைவான நேரத்தில் எட்டிய காளை மாடுகள், குதிரைகளுக்கு எம்.எல்.ஏ., மாணிக்கம், ஒன்றிய செயலாளர் தியாகராஜன், முன்னாள் மாவட்ட பஞ்., துணைத்தலைவர் தேன்மொழி ஆகியோர் பரிசு தொகை வழங்கினர்.
திருச்சி, புதுக்கோட்டை, சேலம், திண்டுக்கல், கரூர் மாவட்ட காளைகள், குதிரைகள் கலந்து கொண்டன.

