/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் கரூரில் குதிரை ரேக்ளா போட்டி
/
எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் கரூரில் குதிரை ரேக்ளா போட்டி
எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் கரூரில் குதிரை ரேக்ளா போட்டி
எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் கரூரில் குதிரை ரேக்ளா போட்டி
ADDED : மார் 17, 2025 04:37 AM
கரூர்: கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி சார்பில், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார் தலைமையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை-யொட்டி, 14வது குதிரை ரேக்ளா போட்டி, வாங்கல் சாலை அரசு காலனியில், நேற்று நடந்தது.
அதில், பெரிய குதிரை, சிறிய குதிரை, புதிய குதிரை பிரிவில் நடந்த போட்டிகளை, கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின், இறுதியில், வெற்றி பெற்ற ஒன்று முதல் ஆறு குதிரை உரி-மையாளர்களுக்கு, ரொக்க பரிசும், கேடயமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாநில அமைப்பு செயலாளர் சின்னசாமி, எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் முன்னாள் அமைச்சர் சிவபதி, மாவட்ட எம். ஜி.ஆர்., இளைஞர் அணி துணைத்தலைவர் முத்-துக்குமார், இணைச்செயலாளர்கள் கரிகாலன், சுரேஷ், மாவட்ட நிர்வாகிகள் கண்ணதாசன், நெடுஞ்செழியன், பாலமுருகன், ஒன்-றிய செயலாளர் கமலகண்ணன் உள்ளிட்ட, அ.தி.மு.க., நிர்வா-கிகள் பலர் பங்கேற்றனர்.