ADDED : செப் 23, 2024 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, நடுத்தெருவை சேர்ந்தவர் ஜோதிராஜ், 52; இவரது மனைவி சாந்தி, 48. தம்பதியர், குளித்தலை அடுத்த கழுகூர் பஞ்., அ.உடையாப்பட்டி பஸ் ஸ்டாப்பில், கடந்த, 10 நாட்களுக்கு முன் ஓட்டல் வைத்து நடத்தி வந்தனர்.
கடைக்கு மாஸ்டர் இல்லாததால், கடந்த, 17ல் தோகைமலை சென்று மாஸ்டரை அழைத்து வருவதாக கூறிச்சென்றார். பின், ஜோதிராஜ் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், கணவரை கண்டு-பிடித்து தருமாறு மனைவி கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.