தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாவட்டத்தில் வீடுகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

மாவட்டத்தில் வீடுகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

மாவட்டத்தில் வீடுகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்


ADDED : ஆக 02, 2026 07:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2026 07:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் மாவட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2027 பணிகளில், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

நேற்று முதல், வரும் 30 வரை கணக்கெடுப்பில், பொதுமக்கள் வசிக்கும் வீட்டின் கட்டுமான பொருட்கள், குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை, குடும்பத்தலைவரின் பெயர், பாலினம், வகுப்பு, வீட்டின் உரிமை, வசிக்கும் அறைகளின் எண்ணிகை, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, குளியலறை வசதி, சமையலறை வசதி, 'டிவி' இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் வசதி, இணையதளம் வசதி, கணினி உள்ளிட்ட, 33 கேள்விகள் கணக்கெடுப்பாளர்களால் கேட்கப்படும். சரியான தகவல்களை பொதுமக்கள் வழங்க வேண்டும்.

சுய கணக்கெடுப்பு செய்தவர்களுக்கு தனித்துவமான, 11 இலக்க சுய கணக்கெடுப்பு அடையாள எண்ணை கணக்கெடுப்பாளரிடம் வழங்கினால் மட்டும் போதுமானது. மேலும் விபரம் பெற, கலெக்டர் அலுவலக மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி மையத்தை, 04324- 255366 -என்ற எண்ணில் அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us