/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மழையால் மின் விபத்தை தவிர்க்கும் வழிமுறை: மின்வாரியம் அறிவுரை
/
மழையால் மின் விபத்தை தவிர்க்கும் வழிமுறை: மின்வாரியம் அறிவுரை
மழையால் மின் விபத்தை தவிர்க்கும் வழிமுறை: மின்வாரியம் அறிவுரை
மழையால் மின் விபத்தை தவிர்க்கும் வழிமுறை: மின்வாரியம் அறிவுரை
ADDED : நவ 04, 2024 05:11 AM
கரூர்: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி, மின் விபத்-துகளை தவிர்க்க, மின்வாரியம் அறிவுரை வழங்கி உள்ளது.
இதுகுறித்து, வெளியிட்ட அறிக்கை: மழையாலும், காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின்கம்பியருகே செல்லக் கூடாது. இதுதொடர்பாக உடனே மின்வாரியத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும். மின்வாரியத்தின் மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகி-லுள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்வாரிய அலுவலர்-களை அணுக வேண்டும். மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள் அருகே செல்லக்கூடாது. மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக் கூடாது. அதன்மீது விளம்பர பலகைகளை கட்டக் கூடாது. மின்கம்பத்திலோ, அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக்கூடாது. மின்கம்பத்தின் மீது கொடிக்கயிறு கட்டி துணி காயவைக்க கூடாது. ஈரமான கைகளுடன் சுவிட்ச் மற்றும் பிளக்குகள் போன்-றவற்றை இயக்குதல் கூடாது. மின்மாற்றிகள் மற்றும் துணை மின்-நிலையத்திற்காக போடப்பட்டுள்ள வேலியின் அருகே சிறுநீர் கழிக்க செல்லக் கூடாது. மின்சாரத்தால் ஏற்பட்ட தீயை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம். இடி, மின்னலின்-போது, 'டிவி', மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர் மற்றும் தொலை-பேசி போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.