தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 100 சதவீத ஓட்டளிப்பை வலியுறுத்தி மனித சங்கிலி

100 சதவீத ஓட்டளிப்பை வலியுறுத்தி மனித சங்கிலி

100 சதவீத ஓட்டளிப்பை வலியுறுத்தி மனித சங்கிலி


ADDED : மார் 21, 2026 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 06:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்; கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், 100 சதவீதம் ஓட்டளிப்பை வலியுறுத்தி மனித சங்கிலி நடந்தது. மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் விமல்ராஜ் தொடங்கி வைத்தார். ஏப்., 23ம் தேதி நடைபெறும் சட்டசபை தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தியும், வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், பேரணி, கோலங்கள், வாக்காளர் உறுதிமொழி ஆகிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது.

அந்த வகையில், சத்துணவு பணியாளர்களின் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கோலங்கள், மனித சங்கிலி பேரணி நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) யுரேகா, திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் தனசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us