/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஓய்வூதியர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மனித சங்கிலி போராட்டம்
/
ஓய்வூதியர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மனித சங்கிலி போராட்டம்
ஓய்வூதியர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மனித சங்கிலி போராட்டம்
ஓய்வூதியர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மனித சங்கிலி போராட்டம்
ADDED : ஜூலை 26, 2025 01:05 AM
கரூர், கரூரிங், ஓய்வூதியர் ஒருங்கிணைப்பு குழு சார்பில், மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
மத்திய, மாநில அரசு, பொதுத்துறை ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்பு குழு, கரூர் மாவட்ட கிளை சார்பில், மண்டல துணைத் தலைவர் கணேசன் தலைமையில், ஜவஹர் பஜார் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
அதில், கடந்த மார்ச் மாதம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட வேலிடேசன் நடை முறையை ரத்து செய்ய வேண்டும், பென்ஷன் தொகைக்கு வழங்கப்பட்ட டி.ஏ.,வை மீண்டும் வழங்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியர்களுக்கு, மருத்துவ காப்பீட்டில் உள்ள நடைமுறையை தளர்த்த வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம், குழு நிர்வாகிகள் சக்தி வேல், சுப்பிரமணியம், அன்பழகன், கோபால், விஸ்வநாதன், பால சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.