/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜாக்டோ - ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம்
/
ஜாக்டோ - ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம்
ADDED : மார் 24, 2025 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: தமிழகம் முழுவதும், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், சாலை பணியாளர்களின், 41 மாத பணிநீக்க காலத்தை, பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும், அரசு துறைகளில் காலியாக உள்ள, 30 சதவீதத்துக்கும் அதிகமான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் வட்டார அலுவலகம் முன் நடந்த, உண்ணாவிரத போராட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசன், மாநில பொதுச்செயலாளர் சதீஷ், முன்னாள் மாநில தலைவர் அழகிரிசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.