/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரத போஸ்டரால் பரபரப்பு
/
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரத போஸ்டரால் பரபரப்பு
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரத போஸ்டரால் பரபரப்பு
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரத போஸ்டரால் பரபரப்பு
ADDED : செப் 11, 2025 01:27 AM
குளித்தலை, : குளித்தலை நகர பகுதியில், மக்கள் வாழ்வுரிமை சங்கம் சார்பில், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், உண்ணாவிரத போராட்டம் என்ற தலைப்பில், 2019ல், தமிழக அரசால் ஏழை, எளிய மக்களுக்கும், பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கும், குறுகலான சாலை அமைப்பை தெருவாக கொண்ட மக்களுக்கும், கட்டட அமைப்பில் வழங்கி உள்ள சலுகைகளை வழங்காமல், குளித்தலை நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
கட்டட விதிகளின்படி தொடர் கட்டுமான பகுதி மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பகுதி ஆகியவற்றை அறிவிக்க நேரிலும், கடிதத்திலும் பலமுறை வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காத நகராட்சி கமிஷனரையும், நகராட்சி தலைவர், கவுன்சிலர்களையும் கண்டித்து, நாளை (12ல்) கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
இப்போராட்டத்திற்கு ஆதரவு அளிக்குமாறு, பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.