ADDED : மே 15, 2026 06:00 AM
அ நிறம் | அளவு
குளித்தலை, குளித்தலை அடுத்த சங்கரமலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன்-அழகம்மாள் தம்பதியர்களுக்கு விஷ்ணுவரதன், 17, இனியவன், 15, என இரு மகன்கள் உள்ளனர்.
நாகராஜன், 37. திருக்காம்புலியூர் பஸ் நிறுத்தம் அருகே பஞ்சர் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். அழகம்மாள், 35, கரூர் தனியார் டெக்ஸ்டைல் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வருகிறார்.
நாகராஜன் தனது இரண்டு மகன்களை அழைத்துக் கொண்டு, கடந்த 11ம் தேதி கரூருக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர். இரண்டு மகன்கள் மட்டும் வீட்டுக்கு வந்தனர். அவர் வரவில்லை. பல இடங்களில் தேடியும் விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
எனது கணவரை காணவில்லை என, அழகம்மாள் கொடுத்த புகாரின்படி, மாயனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி
வருகின்றனர்.
