/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மனைவி, மகன் மாயம் போலீசில் கணவர் புகார்
/
மனைவி, மகன் மாயம் போலீசில் கணவர் புகார்
ADDED : ஜூலை 16, 2025 01:53 AM
குளித்தலை, மனைவி, குழந்தையை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் செய்துள்ளார்.
குளித்தலை அடுத்த, மேல் நங்கவரம் பகுதியை சேர்ந்தவர் கோபி, 28. சென்ட்ரிங் கூலி தொழிலாளி. இவரது மனைவி பராசக்தி, 22. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு புவனேஷ் என்ற ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. மனைவி பராசக்தி அடிக்கடி மொபைல்போனில் பேசிக் கொண்டிருந்ததால், கடந்த 3ம் தேதி அவரை கண்டித்து கையால் அடித்துள்ளார்.
இதனால் கோபித்து கொண்ட பராசக்தி கடந்த 4ம் தேதி குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார். கணவர் வேலைக்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது மனைவி, குழந்தையை காணவில்லை. பல இடங்களை தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து கோபி கொடுத்த புகார்படி, நங்கவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.