/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மருத்துவமனையில் புகுந்து மனைவியை கொன்ற கணவன்
/
மருத்துவமனையில் புகுந்து மனைவியை கொன்ற கணவன்
ADDED : ஜூலை 21, 2025 01:46 AM

குளித்தலை: குளித்தலை அரசு மருத்துவமனையில் புகுந்து சிகிச்சையில் இருந்த மனைவியை, குத்தி கொன்ற கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை, ராஜேந்திரம் பஞ்., பட்டவர்த்தியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ராமசாமி.
இவரது மகன் அஜய், 30; கார் டிரைவர். ஐந்தாண்டுகளுக்கு முன் சென்னை ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது உடன் பணிபுரிந்த ஆந்திராவை சேர்ந்த சுருதி, 27, என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
தனியார் பள்ளியில், சுருதி ஆசிரியையாக பணிபுரிந்தார். நேற்று முன்தினம், தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், காயமடைந்த சுருதி, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு மருத்துவமனைக்கு சென்ற அஜய், துாங்கிக் கொண்டிருந்த மனைவியை, மறைத்து எடுத்துச் சென்ற கத்தியால், கழுத்து உள்ளிட்ட இடங்களில் குத்திவிட்டு ஓட்டம் பிடித்தார்.
அவரது அலறல் கேட்டு ஓடிவந்த நர்ஸ் மற்றும் உதவியாளர்கள், சுருதியை மீட்டு, அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். ஆனாலும், சுருதி இறந்தார். அஜயை, குளித்தலை போலீசார் தேடி வருகின்றனர். அரசு மருத்துவமனைக்குள் புகுந்து, சிகிச்சை பெற்ற மனைவியை, கணவர் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.