ADDED : ஆக 25, 2025 02:59 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த நாகனுார் பஞ்., கம்பத்தான்பாறை கிரா-மத்தை சேர்ந்தவர் அம்பிகா, 28; விவசாய கூலித்தொழிலாளி. இவரது கணவர் குமரேசன், 34; தம்பதியருக்கு, ஏழு வயதில் ஒரு மகன் உள்ளார். மேலும், தற்போது அம்பிகா ஏழு மாத கர்ப்பிணி-யாக உள்ளார்.
கணவர் குமரேசன், கரூரில் உள்ள மொபைல் போன் கடையில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, அவ-ருடன் வேலை செய்யும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு போனில் பேசி வந்துள்ளார். இதனால், தம்பதியர் கஇடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த, 21ல் வீட்டைவிட்டு வெளியே சென்ற குமரேசன், மீண்டும் வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவி-னர்கள் வீடுகளில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதனால், காணாமல்போன தன் கணவரை கண்டுபிடித்து தரு-மாறு அம்பிகா அளித்த புகார்படி, தோகைமலை போலீசார் விசா-ரித்து வருகின்றனர்.