ADDED : ஜூலை 15, 2026 05:55 AM
அ நிறம் | அளவு
குளித்தலை: குளித்தலை, சண்முகா நகரை சேர்ந்தவர் நிரஞ்சனாதேவி, 27; இவரது கணவர் ரூபேஷ்குமார், கார் டிரைவர். கடந்த, 12 காலை, 10:50 மணிக்கு, கோடாங்கிபட்டியில் உள்ள ஆயிஷா என்பவர் வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. உறவினர்கள், நண்பர்களிடம் விசாரித்தும், எந்த தகவலும் இல்லை. இந்நிலையில், ரூபேஷ்குமாரின் மொபைல் போனில் இருந்து நிரஞ்சனாதேவிக்கு போன் வந்தது. அதில் பேசியவர், 'ரூபேஷ்குமார் தன்னிடம் இருப்பதாகவும்; வந்தால் கூட்டிச்செல்லலாம்' என கூறிவிட்டு போனை, 'கட்' செய்துள்ளார். மீண்டும் கணவரின் மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, 'சுவிட்ச் ஆப்' என, வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நிரஞ்சனாதேவி, லாலாப்பேட்டை போலீசில் அளித்த புகார்படி, ரூபேஷ்குமாரை தேடி வருகின்றனர்.
