ADDED : அக் 28, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த குருணி குளத்துப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்த ராஜ், 25, கால் டாக்ஸி டிரைவர். கடந்த 4ம் தேதி காலை 10:00 மணியளவில் தேவர்மலை வடக்கு தெருவில் உள்ள தன் மனைவி சுபா, 25, வீட்டிலிருந்து வேலைக்கு சென்றார்
. பினனர் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது கணவரை காணவில்லை என, மனைவி சுபா கொடுத்த புகார்படி, சிந்தா மணிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

