ADDED : அக் 02, 2024 01:58 AM
அ நிறம் | அளவு
மேல்நிலைப் பள்ளியில்
துாய்மை திட்ட பணிகள்
கரூர், அக். 2-
துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், புகளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், துாய்மை பணிகள் நேற்று நடந்தது. அதில், என்.சி.சி., மாணவர்கள் பள்ளி வளாகம் முழுவதும், துாய்மை பணிகளை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து, என்.சி. சி., அலுவலர் பொன்னு சாமி, துாய்மை இந்தியா திட்டம் குறித்தும், துாய்மை பணிகள் அவசியம் குறித்தும், விளக்கம் அளித்து பேசினார். நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியை வளர்மதி, என்.எஸ்.எஸ்., அலுவலர்
சரவணன் உள்பட, பலர் பங்கேற்றனர்.
