தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பயிர்களில் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த யோசனை தேவை

பயிர்களில் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த யோசனை தேவை

பயிர்களில் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த யோசனை தேவை


ADDED : டிச 06, 2025 02:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 06, 2025 02:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதிகளில், கடந்த சில நாட்களாக அதிகப்படியான காற்று வீசி வருகிறது. இப்பகுதியில் முருங்கை, நெல், கம்பு, சோளம் மற்றும் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக, முருங்கை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. அது மட்டுமின்றி, கால்நடை வளர்ப்பும் அதிகளவில் உள்ளது.

தற்போது, முருங்கை மரத்தில் பூக்கள் பூக்கும் தருவாயில் உள்ளது. ஆனால், அதிகளவு பூச்சி தாக்குதலால் மகசூல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பிஞ்சு முருங்கை காய்களில் பூச்சி தாக்குதல் உள்ளது. எனவே, முருங்கை மரங்களில் பூச்சி தாக்குதலை தடுக்க வேண்டிய நடவடிக்கை, பயிர் பாதுகாப்பு முறை குறித்து, அரசு சார்பில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.மேலும், காய்கறி பயிர்களில் பூச்சி தாக்குதலால், அதிகளவு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விவசாயிகளுக்கும், அரசு சார்பில் பயிர் பாதுகாப்பு முறை குறித்து தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us