/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'ஆவணம் பொய்யென நிரூபணமானால் அன்புமணி சிறைக்கு செல்வார்'
/
'ஆவணம் பொய்யென நிரூபணமானால் அன்புமணி சிறைக்கு செல்வார்'
'ஆவணம் பொய்யென நிரூபணமானால் அன்புமணி சிறைக்கு செல்வார்'
'ஆவணம் பொய்யென நிரூபணமானால் அன்புமணி சிறைக்கு செல்வார்'
ADDED : டிச 02, 2025 02:11 AM
கரூர், ''அன்புமணி தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்த ஆவணங்கள் பொய் என, நிரூபணமானால், அவர் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை வரும்,'' என, கரூர் மாவட்ட பா.ம.க., செயலர் பாஸ்கரன் தெரிவித்தார்.
கரூரில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பா.ம.க., பொதுக்குழுவை கூட்ட, நிறுவன தலைவர் ராமதாஸூக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. அன்புமணி கடந்த, 2022ல் பா.ம.க., தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அன்புமணி, 2023ல் தேர்வு செய்யப்பட்டதாக, பொய்யான ஆவணங்களை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ளார். இந்த ஆவணம் பொய் என, நிறுவன தலைவர் ராமதாஸ், 30 ஆவணங்களை தேர்தல் கமிஷனில் வழங்கினார். ஆனால், தேர்தல் கமிஷன் அதை ஏற்கவில்லை. அன்புமணி தாக்கல் செய்த ஆவணங்கள் பொய் என நிரூபிக்கப்பட்டால், அவர் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை வரும்.
பா.ம.க., நிறுவன தலைவர் ராமதாஸ் கட்டுப்பாட்டில் அன்புமணி இல்லை. அன்புமணி மீது பல வழக்குகள் உள்ளன. இதனால், அன்புமணி பயந்து வேறு நபர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். தேர்தல் ஆணையத்துடன், அன்புமணி கூட்டணி வைத்துள்ளார். தேர்தல் ஆணையத்தை கண்டித்து சென்னை, டெல்லியில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பா.ம.க., தொண்டர்கள் பங்கேற்பர். தற்போது, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூட்டணி குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. வரும், 30ல் சேலம் மாவட்டம் தலைவாசலில் நடக்கும் பொதுக்
குழுவில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூட்டணி குறித்து அறிவிப்பார்.
இவ்வாறு தெரிவித்தார்.

