தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 'குப்பையை பிரித்து வழங்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்'

'குப்பையை பிரித்து வழங்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்'

'குப்பையை பிரித்து வழங்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்'


ADDED : ஆக 27, 2026 02:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 02:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: குப்பையை நான்கு பிரிவுகளாக பிரித்து வழங்கவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படும் என, கரூர் மாநகராட்சி கமி-ஷனர் பிரித்திவிராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா-வது:

கரூர் மாநகராட்சியின், 48 வார்டுகளில், 81,118 குடியிருப்பு, 12,521 வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்கு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் கீழ், நிறுவனங்கள் மற்றும் அமைப்-புகள் ஆகியவை, மக்கும் கழிவு, மக்காத கழிவு, சுகாதார கழிவு, அபாயகர கழிவு என குப்பை-களை நான்கு பிரிவுகளால் பிரிக்க வேண்டும். இவ்வாறு பிரிக்-கப்பட்டு தான், துாய்மை பணியாளர்களிடம் ஒப்படை வேண்டும். பிரிக்கப்படாத கழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்-டாது. இந்த விதிகளின்படி, திடக்கழிவுகளை பிரிக்காமல் வழங்-கினால், எரித்தாலோ அல்லது தெரு ஓரங்களில் எரித்தால், 1,000 முதல், 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இது-வரை, 65 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us