ADDED : ஜூன் 16, 2026 03:29 AM
அ நிறம் | அளவு
கரூர்; கரூர் அருகே, சட்ட விரோதமாக மது பாட் டில்களை விற்றதாக, ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் மேட்டு மகாதானபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்றதாக, அதே பகுதியை சேர்ந்த கண்ணன், 45, என்பவரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 5,400 ரூபாய் மதிப்புள்ள, 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
